பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான இடங்களில் Wi-Fi ஐ பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
எனவே, பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தி இணைய வேலைகளை செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“இலவச Wi-Fi ஐ சேவையின் மூலம் தமது இணைய சாதனங்களில் ஊடுருவி கடவுச்சொற்கள் மற்றும் பிற இரகசிய தகவல்களை திருடும் மோசடி இடம்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது மின்னஞ்சல் முகவரிகளை அணுகி எந்த நேரத்திலும் கணக்கியல் பணியையும் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் WhatsApp கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.