கனடாவிற்கு குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் ட்ரூடோ , குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மார்க் மில்லர் சசிதமாக கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா 140 கோடிகளுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவைவிடவும் பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு கனடா.
கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் கனடாவின் சனத்தொகை நான்கு கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது.
இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் எதற்காக கனடா குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என்பது தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கனடாவிற்கு குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் ட்ரூடோ, குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மார்க் மில்லர் சசிதமாக கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இந்த தீர்மானகரமான கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக ஆண்டிற்கு 500 000 குடியேற்றவாசிகளை அனுமதிப்பது என்ற நிலைபாட்டில் இருந்து 2027 ஆம் ஆண்டில் 365, 000 ஆக இந்த எண்ணிக்கை குறைவடையும்.
இது கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்த குடியேற்றம் காரணமாக ஏற்பட்ட விரைவான சனத்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார அழுத்தங்களை (Economic Strain) சமாளிப்பதனை நோக்காக் கொண்டதாகவே குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமைந்துள்ளதாக அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியான ஆரம்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன.