வெலிபென்ன பிரதேசத்தில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர் ) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 300 கிராம் திமிங்கில வாந்தி (அம்பர்) கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.