அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், கலென்பிடுனுவெ – உபுல்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், கலன்பிடுனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.