அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது,
24 மணித்தியாலமும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்த பாசக்குடா கடற்கரையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர் விடுமுறை தினங்கள் மற்றும் முழுமதி போயாதினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் பாசிக்குடா கடற்கரை நிறைந்து காணப்படும்
குறித்த கடலில் மகிழ்ச்சியான முறையில் நீராடி மகிழ்வதற்கும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஓய்வு நேரத்தை கழிப்பதற்குமாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது
பாசிக்குடா கடற்கரை திடலில் பொலிஸார் மற்றும் கடற்கரையினர் சுற்றுலா பொலிசார் உட்பட பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
24 மணித்தியாலமும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.