மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் முதியவர் ஒருவர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது,
பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களும் மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது அப்பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேக நபர், இரு சிறுவர்களையும் ஏமாற்றி ஹொரணை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர், சிறுவர்களை மக்குலுதுவ பிரதேசத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில் , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.