பொதுவாக நடிகைகள் சாதாரணமானவர்கள் போல சாப்பிட மாட்டார்கள். ஆரோக்கியமான உடலை கொண்டிருக்க அவர்களுக்கு காரணமாக அமைவது அவர்களின் வாழ்க்கை முறை தான்.
தற்போது முன்னர் இருந்த பாரம்பரிய உணவுகளை மறந்து அனைவரும் துரித உணவுகளுக்கு அடிமையாக மாறி விட்டனர். இந்த துரித உணவுகள் உடலை ஆரோக்கியத்தில் இருந்து விடுவித்து பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கின்றன.
உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படியான உணவுகளிடம் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
வெள்ளை மாவினால் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. இதில் வைட்டமின்கள் அல்லது நார்ச்சத்து இருப்பதில்லை. இந்த மாவை வைத்து செய்யப்படும் குக்கீகள் மற்றும் கேக்குகள் போன்ற பொருட்களை சாப்பிடும்போது உடலில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக நமது தோல் அழகை இழக்க நேரிடும். எனவே இந்த வெள்ளை மாவில் செய்த பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸ்.
இது உடலின் உள்ளே பல நோய்களுக்கு வழி வகுக்கும். இது சாப்பிடுவதற்கு மட்டும் தான் சுவையாக இருக்கும். உடலின் உள்ளே இது கொலஸ்ராலின் அளவை அதிகப்படுத்தும்.
இதில் இருக்கும் கலோரிகள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். வெள்ளை சர்க்கரை பொதவாக அனைவரும் விரம்பி எடுத்துக்கொள்வார்கள். இது நம் உடலுக்கு எந்த நன்மையும் வழங்காத ஒரு வகையான இனிப்புப் பொருள்.
இதை அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்வதுடன், நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தோலை விரைவில் சுரங்கச் செய்யும்.
தற்போது அதிகமாக சாப்பிடும் துரித உணவுகளில் பாஸ்தாவும் ஒன்று. இது நார்ச்சத்து இல்லாத ஒரு வகை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் இரத்த சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும், ஆனால் அதிகமாக சாப்பிட்டால், அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம்.
அதிகமாக சமைக்கப்படும் வெள்ளை அரிசி. இது உங்கள் இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்கின்றது. இது உடலுக்கு நல்லது அல்ல. பிரவுன் அல்லது காட்டு அரிசி போன்ற மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது இதில் ஆரோக்கியமான சத்த உன்றம் இல்லை.
நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற முக்கியமான சத்துக்கள் அகற்றப்பட்டு பிரட் தயாரிக்கப்படுகிறது. இவற்றை சாப்பிடும் போது, நமது இரத்த சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது போன்ற உணவுகளிடம் இருந்து நாம் விலகி இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் அழகாகவும் இருக்கும்.