நாட்டில் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு உரிமத்தின் அமைய வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வரை இதற்கான கால எல்லை நீடிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.