இலங்கையில் உள்ள 21 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றிரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.