2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையில் 2533.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுற்றுலா வருமானம் 59% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு
நாட்டிற்கு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 44% ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2024 ஒக்டோபர் மாதத்தில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
2024 செப்டம்பர் மாதத்தில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 7.9% அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்க விருது
மேலும், 2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு (Srilanka) தங்க விருது பிரித்தானியாவின் லண்டன் (London) நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.