காலியில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது பூஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இன்று (13) இடம்பெற்ளுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “விபத்துக்குள்ளான பேருந்து காலி தெற்கற்ற பெண்கள் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இந்தநிலையில், வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.