காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காலி, மிஹிரிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மீனவர் ஒருவர் ஆவார்.
முன்விரோதம் காரணமாக மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்ற இனங்காணாத மூவரால் இந்த வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.