தமிழ் மக்களால் ஜனநாயகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சுமந்திரனை மறுபடியும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்ப சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
தமிழரசுக் கட்சிக்குள் திட்டமிட்டு சுமந்திரனால் புகுத்தப்பட்ட நபர்களை வைத்து சுமந்திரனுக்கே தேசியப் பட்டியல் ஆசணம் வழங்கப்படவேண்டும் என்று அழுத்தங்களை அவர் வழங்கிவருவதாகவும் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.
மக்கள் ஆணை வழங்காமல் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தபோதும், கட்சி முடிவுசெய்தால் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறி, தேசியப்பட்டியல் நியமனத்திற்கான தனது நகர்வை வெளிப்படுத்தியும் இருந்தார்.
அதேவேளை, மாவை சேனாதிராஜா, சத்தியலிங்கம் போன்ற தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாத, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனம் இல்லாத நபர்களின் பெயர்களை தேசியப்பட்டியலுக்கு முன்மொழிந்து, இவர்களைவிட சுமந்திரனே மேல் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் சதிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் விட, தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.
பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லை.
இது கூட சுமந்திரனை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புவதற்கான சதி என்றே கூறுகின்றார்கள் கட்சி உறுப்பினர்கள்.
யாழ்மக்கள் இத்தனை தண்டணை கொடுத்தும் தமிழரசுக் கட்சி இன்னமும் திருந்தவில்லை என்பது கவலையளிப்பதாகக் கூறுகின்றார் ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்