தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான சகல தகுதிகளும் தமக்கு உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
இந்த ஆசனங்களில் ஒன்றுக்கு தமது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தாம் நாடு முழுவதிலும் மகளிர் அமைப்புக்களை உருவாக்கி பிரசாரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்றுள்ள ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் அதை பெற்றுக் கொள்ளும் சகல தகுதிகளும் தமக்கு உண்டு என ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.