மாதிவெல எம்.பி.களின் வீட்டுத் தொகுதியை காலி செய்யாவிட்டால் , அவர்களது மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர, இன்று (21) அறிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல எம்.பிக்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெற்ற கடந்த 14 ஆம் திகதி வரை மாத்திரமே தங்க அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, நேற்று (20ம் தேதி) வரை சுமார் எண்பது எம்பிக்கள் மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி.க்கள் மட்டுமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்க முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகையாக, எம்.பி. உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகள் ரூ.2000 வாடகைக்கு வழங்கப்படுகிறது