யாழ்ப்பாணம் சாகவக்கச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அருச்சுனா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழில் சுயேட்சையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
பல ஆண்டுகள் தமிழ் அரசியல் கட்சியில் இருந்த பலர் பொது தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களை மக்கள் தோற்கடித்து விட்டனர்.
ஆனால் மிக குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலாகி இன்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அருச்சுனா நுழைந்துள்ளார்.
நாடாளுமன்றம் ஆரம்பித்த முதல் நாளே எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து மருத்துவர் அருச்சுனா சிங்கள சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டார்.
இந்நிலையில் மருத்துவர் அருச்சுனாவின் செயல்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் , அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர் நாடாளுமன்றில் என்ன சாதித்து விடபோகின்றார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம்
அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணராக கடமையாற்றிய போதே அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமையே இதற்குக் காரணம். இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது.
இந்நிலைமையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்ட சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.