பதுளை – லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை – அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பதற்கு முற்பட்ட தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதன்படி, 29 வயதுடைய ஆணொருவரும், 40 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட 4 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.