திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக இளைஞன்னின் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போய் ஒரு வாரமாகிய நிலையிலேயே இளைஞனின் உறவினர்கள் கடந்த மாதம் 25ம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், இதுவரைக்கும் எவ்வித தகவல்களும் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போயுள்ள இளைஞ்ர் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களது தொலைபேசி இலக்கமான 071 425 8714 அறிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.