மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள முன்மொழிவை மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இறுதி முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அது தொடர்பான ஆய்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தவிசாளர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்னும் இரண்டு வாரங்களில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபை தனது முன்மொழிவை சமர்ப்பித்திருந்தது.
அதன்போது, எதிர்வரும் ஆண்டு (2025) முதல் ஆறு மாதங்களுக்கும் ஏற்கனவே உள்ள மின்சாரக் கட்டணத்தை பராமரிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புகள் தெரிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















