நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு (Landslide) அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது இன்று (14) மாலை 06 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.