யாழ்ப்பாணம் (Jaffna) மல்லாவியில் இருந்து 15இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (15) காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.