தனது 82 வயதுடைய தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மகனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, பிசோகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொடகவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று தாய் மற்றும் மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மகன் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், மகன் உடவளவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இரத்தினபுரி, பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார்.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.