கனடாவின் நிதி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விடயம் கனடா அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கனடா நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland), பிரதமர் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்தார்.
இந்நிலையில், Dominic LeBlanc (57) என்பவரை நாட்டின் நிதி அமைச்சராக ட்ரூடோ தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொமினிக், இன்று மாலை நிதி அமைச்சராக பதவியேற்கக்கூடும் என அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொமினிக், தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிவருகிறார்.
கனடா அமெரிக்க எல்லை வழியாக புலம்பெயர்ந்தோரும், போதைப்பொருட்களும் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் கனடா மீது 25 சதவிகித வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில், எல்லை பாதுகாப்பை கண்காணிக்கும் பொறுப்பை கவனித்து வருபவர் டொமினிக் என்பது குறிப்பிடத்தக்கது.