பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்க இணங்கியுள்ளது.
இந்த நன்கொடையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வாகனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.