துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் காரன் “எல்டோ டமேர் ” என்பவரின் உதவியாளர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா, புத்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய பெண்ணும் 44 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேக நபர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 94 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன