யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (19-12-2024) திடீரென மயக்க முற்றுள்ளார்.
இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்து உடற் கூற்றுப் பரிசோதனைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் நிமோனியா காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.