மருதானை – மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்ணை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச்சூட்டிற்காக வருகைதந்திருந்த மோட்டார் சைக்கிள் சாரதி நேற்றிரவு (21) கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 16.550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவராவார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இதுவரையில் பெண் உள்ளிட்ட 3 பேர் கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.