அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மத்திய அரசாங்கத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட 40 மரண தண்டனைக் கைதிகளில் 37 பேருக்கு இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மரண தண்டனை கைதிகளுக்கான தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
போஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியின் போது குண்டுத் தாக்குதல் நடத்தியவர், 2018ஆம் ஆண்டு யூத வழிபாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மூவருக்கான தண்டனை பைடன் ரத்து செய்யவில்லை.
மத்திய அரசாங்கம் என்ற ரீதியில் மரண தண்டனையை விதிப்பதனை வரையறுக்க வேண்டுமென பைடன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மாநில அளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2000 கைதிகளுக்கான தண்டனையில் தளர்வு இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொள்ள உள்ள நிலையில், ஜோ பைடன் இவ்வாறு தண்டனை தளர்வு குறித்து அறிவித்துள்ளார்.