கொலை செய்யப்படிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று வாகனம் ஒன்றுக்குள் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியின் 38 கிலோமீற்றர் இடையில் இந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மின்னேரிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
நேற்றிரவு (25) பத்து மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், தீ பரவும் போது வேறு யாரும் அங்கு இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட ஒருவரது சடலத்தை வாகனத்தில் இந்தப் பகுதிக்கு கொண்டு வந்து , வாகனத்துக்குள் போட்டு தீ வைத்து எரித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எரிந்த வாகனம் கெப் வாகனம் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.