கொழும்பில் உள்ள பகுதியொன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞர் நேற்று (31-12-2024) நண்பர்களுடன் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.
அப்போது, இரண்டு இளைஞர்கள் அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் ஒருவர் இன்றையதினம் (01-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.