பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சந்தையில், பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், குறித்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு அவர் கோரியுள்ளார். பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான கடிதம் ஒன்று இன்று (02) நிதியமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் பாடசாலை உபகரணங்களுக்கும் 18 சதவீத வற் வரி விதித்தது. குறித்த வரி நீக்கப்பட வேண்டும்.
அதற்காகவே நாம் இன்று கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளோம்.
தற்போதைய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தது போல, குறித்த வற் வரி நீக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் வலியுறுத்தியுள்ளார்.