நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியான நிலையில் உள்ளதால் எதிர்வரும் நாட்களில் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath எச்சரித்துள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுகி்ன்றது. விழுந்த இடத்திலிருந்து எழுந்து நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பமாக உழைக்கும் போது, குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். குடும்ப நலமே தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.
அவ்வாறே இலங்கையின் நலன் கருதி எடுக்கும் தீர்மானங்கள் சில நேரம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதனை பழகிக்கொள்ள வேண்டி வரும். அது தொடர்பில் யாரும் தப்பான அபிப்பிராயங்களை மேற்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.