நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற பணியாளர்களுக்கு மட்டும் இந்த கொடுப்பனவை வழங்கினால் அது பிழையான முன்னுதாரணமாக அமையக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் சுமார் 1200 பணியாளர்கள் இந்த கொடுப்பனவு பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு நாடாளுமன்ற பணியாளர்கள் அரசாங்கப் பிரதானிகளிடம் அண்மையில் கோரியிருந்தனர்.
எனினும் இந்தக் கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.