திருகோணமலையில் உள்ள சமுத்திராகம கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த 53 வயதான ரம்பண்டா முடியன்சலாகே அஜித் பிரசன்னா என தலைமையக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.