பதுளையில் உள்ள மடுல்சீமை பகுதியில் தமது 6 வயதுடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ள நிலையில், அவர் தமது தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சிறுமி பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவித்து சிறுவர் மற்றும் மகளிர் பணிக்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தமது தந்தையால் தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் குறித்த சிறுமி கூறினார் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து, சந்தேகநபரான தந்தையை நேற்று (03-01-2025) பொலிஸார் கைது செய்ய நிலையில் நேற்று (04-01-2025) பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமி தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.