ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் அனைவரின் கவனமும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மேல் தான் இருக்கும்.
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் மற்றும் புகழ்பெற்ற ஜோதிடர் தான் நோஸ்ட்ராடாமஸ்.
இவர், இதுவரையில் வரலாற்றில் நடந்த முக்கியமான இயற்கை பேரழிவுகள், புரட்சிகள், போர்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை அவர் தனது படைப்புகளில் ஏற்கனவே கணித்து குறிப்பிட்டுள்ளார். அவரது படைப்புகளில் இருக்கும் குறியீட்டு மொழிகளில் எதிர்கால கணிப்புகளை காணலாம்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு 2025- ஆம் ஆண்டின் ஜோதிட கணிப்புகள் மற்றும் குறிப்பிட்ட ராசிகளின் பண்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்கள் மர்மங்கள் மற்றும் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வையை வழங்குகின்றன.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவை என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
2025 நடக்கப்போகும் அழிவுகள்
1. நோஸ்ட்ராடாமஸ் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் அரசியல் பதட்டங்கள் மற்றும் போர் உருவாகும் சூழல் உள்ளன. இந்த கணிப்பு புறக்கணிக்கப்படவில்லை.
2. ஐரோப்பா கண்டம் முழுவதும் “ஆபத்தான போர்கள்” விரைவில் வெடிக்கும் என்று நோஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார். இது உலக நாடுகளுக்கு சவாலான காலக்கட்டம் என்றும் கூறுகிறார். அரச குடும்பத்திற்குள் உள்ள பதட்டங்கள் காரணமாக இப்படியான சூழ்நிலை உருவாகும்.
3. நோஸ்ட்ராடாமஸ் கூற்றின்படி, இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம். பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படலாம். இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் அழிவையும் குழப்பத்தையும் ஏற்படும். இதன் விளைவாக மில்லியன் கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படும்.
4. சமீபத்திய ஆண்டுகளில் இவரின் கணிப்பின் படி பூமியின் மையத்தில் இருந்து நில நடுக்கம் மற்றும் தீ பரவல் ஆகிய நிஜமாகியுள்ளது. இதனால் இவரின் கருத்துக்களை மக்கள் இதுவரை காலமாக நம்பி வருகிறார்கள்.
5. 2025 ஆம் ஆண்டிற்கான மற்றொரு மோசமான கணிப்பு என்னவென்றால் உலகளாவிய ரீதியில் பொருளாதார சரிவு ஏற்படும். அத்துடன் இது நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தும். தற்போதைய உலகப் பொருளாதார சூழலில், பல நாடுகள் கடன் மற்றும் பிற பொருளாதார சவால்களுடன் தொடர்புப்பட்டு வருகிறது.