உலகளவில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவர் ஆவார்.
வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல், இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர் இதுவரை அடைந்த மிக உயர்ந்த உலக தரவரிசையாக இது கருதப்படுகிறது.
இவ் விடயம் இலங்கை டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமைகிறது.
இந்த சாதனைக்கு மேலதிகமாக, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான உலக தரவரிசையில் தாவி 67வது இடத்தையும் பிடித்துள்ளார்.