யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
அதோடு குழுவொன்று யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது.
அதன்அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று ஆரம்பமானது.
2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ள