யாழ். தனியார் வைத்தியசாலையின் கழிவு நீரை மக்களின் போக்குவரத்து பாதையில் திறந்து விடுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தமக்கான வாழ்விடங்களில் சிறு மதில்களைக் கட்டுதற்கு கூட அனுமதி பெறச் சென்றால், ஆயிரம் தடவைகள் அவர்களை அலைக்கழித்து, கட்டட அனுமதி கொடுக்க யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றில் கடமையாற்றும் அதிகாரிகள் தொடங்கி சிற்றுாழியர்கள் வரை தமது உச்ச பட்ச சுயலாபத்தை கருத்தில் எடுத்தே செயலாற்றி வருகின்றார்கள்.
பொதுமக்களிடமிருந்து எவ்வாறு லஞ்சம் பெறலாம் என விதம் விதமாக யோசித்து செயற்பட்டு வருகி்ன்றார்கள்.
இவர்களின் கண்களுக்கு யாழ் குறித்த தனியார் வைத்தியசாலை போன்றவை செய்யும் திருகுதாளங்கள் தெரிவதில்லையா? எந்தவித கழிவகற்றும் செயற்பாடுகளும் இன்றி தனியார் வைத்தியசாலையில் கட்டப்படும் கட்டடத்திற்கு யார் அனுமதி கொடுத்தது?
குறித்த வைத்தியசாலை கழிவு நீரை (மலக்கழிவுகளாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கபடும்) வைத்தியசாலையின் பின்பக்க மக்கள் போக்குவரத்து பாதையில் திறந்து விடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.