உலக வாழ் தமிழர்கள் நாளைய தினம்(15) தைப் பொங்கலை கொண்டாட உள்ளனர். உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே தைப்பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் என்பன அமோகமாக இடம்பெற்று வருகிறது.
நாளைய பொங்கல் நிகழ்வுக்காக மக்கள் சந்தைகளில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.