மாத்தறை (Matara)- தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருகிலிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவு
சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு | Another Shooting In Colombo Sri Lanka
இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்துள்ளதுடன் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.