இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கற்பிட்டி பகுதியில் ஹோட்டல் ஒன்றை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்த இத்தாலிய நாட்டவர் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் ஒன்லைன்மூலம் ஹோட்டல் அறையை ஒதுக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவர் பதிவு செய்த ஹோட்டலுக்கு சென்ற போது, அது ஐந்து வருடத்திற்கு முன்னரே மூட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் வசிக்கும் இந்த வெளிநாட்டவர், கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்து நீர்கொழும்பில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் தங்கியுள்ளார்.
பின்னர் ஒன்லைன் முன்பதிவு முறை மூலம் கற்பிட்டியின் சேதாவாடிய பகுதியில் ஒரு சுற்றுலா ஹோட்டலை முன்பதிவு செய்துள்ளார்.
அதற்கமைய ஹோட்டல் அறைக்கு சென்ற போது தான் மோசடியான நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளமை குறித்து அறிந்துள்ளார்.
இது குறித்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட இத்தாலிய பிரஜை தெரிவித்துள்ளார்.