வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கும், பதிவுசெய்யப்படாத நிறுவனங்களுக்கும் வெவ்வேறு சட்ட கட்டமைப்புகள் பொருந்தக்கூடியவையாக உள்ளன.
கடந்த காலங்களில், இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மைய காலத்தில் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 6,000 நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.