கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் பல சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே அவ்வப்போது காணாமல் போயுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைகளின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சில சொகுசு வாகனங்கள் அரசியல்வாதிகளுக்கு நட்பான சில சிறிய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.