பொதுவாக மற்ற பழங்களை விட ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் இது பல உடல்நலப் பிரச்சனைகளில் நமக்கு நன்மை தருகிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஆரஞ்சி பழ தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
அத்துடன் ஆரஞ்சி பழத்தில் வைட்டமின் சி உள்ளதால், இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இன்னும் சிலர் உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படியானவர்கள் ஆரஞ்சிபழ தோலில் துவையல் செய்து சாப்பிடலாம்.
அப்படியாயின் கசப்பான ஆரஞ்சி பழ தோலை வைத்து எப்படி துவையல் செய்து சாப்பிடலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சி பழ தோல்
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு – தலா 1.5 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் துருவல், புளி – சிறிதளவு
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு அளவு ஆரஞ்சி பழ தோலை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஆரஞ்சி பழ தோலை சுத்தம் செய்து சிறிதாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் போதுமானளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் ஆரஞ்சி பழ தோலை போட்டு வேக வைக்கவும்.
வெந்தவுடன் ஒரு வாணலியை அடுப்பில் அதில் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளி அதில் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அரைத்த துவையல் ஒரு பக்கம் இருக்கையில், கறிவேப்பிலை,கடுகு, வெந்தயம், மிளகாய் போட்டு தாளித்து அதனை துவையல் மீது ஊற்றி கிளறினால் காரசாரமான ஆரஞ்சிபழ தோல் துவையல் தயார்!