காலி – உடுகம நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேக நபர்களே நேற்று(16.01.2025) இவ்வாறு தப்பி சென்றுள்ளனர்.
விசாரணையின் முடிவில், கைவிலங்கிடப்பட்டு காலி சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர் உடுகம – ஹோமடோல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் நாகொட வாடியகந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.