மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் நிச்சயம் கவனத்திற் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமச்சர் குமார ஜெயக்கொடி(Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிப்படியாக மின் கட்டணத்தை குறைத்து எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் 30 சதவீத மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் இதுதொடர்பான தீர்மானம் சம்பந்தப்பட்ட அமைச்சினால் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.