வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் தெரிவித்தார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணைப் பரீட்சையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



















