அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (28) முதன்முறையாகக் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கான திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கான ஒரு தீர்வாக அலுவலக நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகள் செய்வது குறித்தும், அவற்றைச் செய்யும் வைத்தியர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை
அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட