உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள்.
“சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது.
இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளர்கள் பால் குடிக்கலாமா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளர்கள் பால் குடிக்கலாமா?
பால் மற்றும் பால் கலந்த பொருட்களில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டும் அத்தியாவசிய தாதுக்களாக பார்க்கப்படுகிறது.
இது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சியுடன் நேர்மறையான உறவைக் கொண்டுள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த தாதுக்கள் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. இதன் காரணமாக நீரிழிவு அபாயம் குறைகிறது எனக் கூறப்படுகின்றது.
எலும்பு ஆரோக்கியத்திற்கும் உறுதியளிக்கும் பால் பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பின் உறுதித்தன்மை குறைக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் தொடர்ந்து பால் அருந்தி வரும் நபருக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
பால் அருந்துவதால் ரத்த அழுத்தம் குறையும், இதய நோய்கள் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது.